தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan, பிறப்பு: ஆகத்து 17, 1962), ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு சாம்பவர் (பறையர்) மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். அரசியல் வாழ்வு ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்னும் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1] விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்...
கடவுள் கற்பனையே!