முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பெரியாரும் தனித்தமிழ்நாடும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெரியாரும்,தனித்தமிழ்நாடும் Periyar and tamil independent country

பெரியார் பேசிய திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழர்களின் விடுதலை தான் என்று சென்னை காமராசர் அரங்கத்தில் 19.04.2005 அன்று நடைபெற்ற பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய 'பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசீயம்' நூல் வெளியீட்டு விழாவில், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்கினார் :- பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற இந்த நூலை ஒரு பெரியாரின் தொண்டன் என்ற அடிப்படையில் பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்று சில சொற்களை சொல்ல விரும்புகிறேன். இந்த தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ் நாட்டில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களில் பெரியார் தான் முதன்மையானவர். அப்படிப்பட்ட தலைவரை இவரது சரியான உருவம் எது, இவருடைய சரியான சிந்தனைகள் எவை என்று விளக்குவதற்கு அவருடைய கருத்துகள் முழுமையாக தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆன நிலை யிலும், தோழர் ஆனைமுத்து அவர்கள் வெளியிட்ட பெரியார் சிந்தனை களைத் தவிர, அதற்கு ஆதாரமாக பெரியாரின் கருத்துகள் இவைதான் என்று சொல்லுவதற்கு வேறு தொகுப்புகள் இல்லை. அது தே...