சேலம் மாவட்டம் தீவப்பட்டியில் திருவிழா நடத்துவதில் இன்று (மே 2) இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மோதலாக வெடித்துள்ளது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இங்கு வன்னியர் தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கோவிலில் நாங்களும் திருவிழா நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. அப்பொழுது தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்த பேக்கரி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காவல் துறையி...
கடவுள் கற்பனையே!