முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிலை கடத்தல் நீதிபதி கே.சந்திரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்? ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

சிலைக் கடத்தல் வழக்குகளில் அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டும் தேடிப்பிடித்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், இதுவரை எந்த அர்ச்சகரையும் கைது செய்யாதது ஏன் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் பழமையான கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளே கோயில் சொத்து களை சுரண்டி கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன. இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக் குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் பலரை பொன்மாணிக்கவேல் அதிரடியாக கைது செய்துவரும் சூழலில், ‘‘தமிழக கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளி யேற வேண்டும்” என்று வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யுமான கங்கப்பா கருத்து தெரி வித்திருந்தார். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில், கடந்த 1981-ம் ஆண்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாத நிலையில் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ததில் ஒரு ஆட்சியராக தனது பங்க ளிப்பு முக்கியமான...