முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி

தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான். • 1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார். • தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர். • 1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார். • போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது. • தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன. • இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது. • இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர். • தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார். • பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார். • அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அமைப்பாய் திரள்வோம்- தொல் திருமாவளவன் [PDF]

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் என்னும் இலட்சியத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கருத்தியலை அனைத்து தளங்களிலும் வேரூன்ற செய்வதற்கு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விசிகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத் தற்போது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியப் பாதையில் என்னுடன் இணைந்து பயணிக்க இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்! சமத்துவ சமுதாயம் அமைத்திட, வகுப்புவாத சக்திகளிடம் இருந்து சனநாயகத்தைப் பாதுகாத்திட நாம் அனைவரும் அணியமாவோம்! அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! "அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!" என்பது சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் மற்றும் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். தொல். திருமாவளவன் இதனை முன்ன நடத்தியுள்ளார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளன: முக்கிய நோக்கங்கள் • சமத்துவ சம...

பணம் சார் உளவியல்_The Psychology of Money by மார்கன் ஹௌஸ்ஸேல்[PDF]

மோர்கன் ஹவுஸ்லின் தி சைக்காலஜி ஆஃப் மனி" என்பது மனித நடத்தை மற்றும் நிதி முடிவுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். 2020 இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பாரம்பரிய நிதி ஆலோசனைகளைத் தாண்டி, உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பார்வையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த நிதி எழுத்தாளர் மற்றும் கூட்டு நிதியத்தின் பங்குதாரரான ஹவுஸ்ல், நிஜ உலக நிகழ்வுகள், வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் உளவியல் நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து, வாசகர்களை எதிரொலிக்கும் வகையில் உருவாக்குகிறார். இந்த புத்தகம் பணத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, இது எங்கள் நிதி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும் நிதியியல் கல்வியறிவின் நிலைகள், அவரது சொந்த அனுபவங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களிடமிருந்தும் வரையப்பட்ட கதைசொல்லல் அணுகுமுறை, நிதி நிபுணரின் விரிவுரையை விட அறிவார்ந்த நண்பருடன் உரையாடுவதைப் போன்றது. செல்வம் என்பது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள டாலர்கள் மற்றும் சென்ட்களைப் பற்றியது மட்டுமல்ல, பணத்துடனான நமது உறவை வடிவமைக்கும் உணர்ச்சிகள்,...