முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan, பிறப்பு: ஆகத்து 17, 1962), ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு சாம்பவர் (பறையர்) மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.
அரசியல் வாழ்வு ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்னும் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1]
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.[1] இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில்,திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார் அரசியல் கொள்கை சாம்பவர் (பறையர்) மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அமைப்பாய் திரள்வோம்- தொல் திருமாவளவன் [PDF]

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் என்னும் இலட்சியத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கருத்தியலை அனைத்து தளங்களிலும் வேரூன்ற செய்வதற்கு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விசிகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத் தற்போது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியப் பாதையில் என்னுடன் இணைந்து பயணிக்க இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்! சமத்துவ சமுதாயம் அமைத்திட, வகுப்புவாத சக்திகளிடம் இருந்து சனநாயகத்தைப் பாதுகாத்திட நாம் அனைவரும் அணியமாவோம்! அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! "அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!" என்பது சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் மற்றும் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். தொல். திருமாவளவன் இதனை முன்ன நடத்தியுள்ளார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளன: முக்கிய நோக்கங்கள் • சமத்துவ சம...

பணம் சார் உளவியல்_The Psychology of Money by மார்கன் ஹௌஸ்ஸேல்[PDF]

மோர்கன் ஹவுஸ்லின் தி சைக்காலஜி ஆஃப் மனி" என்பது மனித நடத்தை மற்றும் நிதி முடிவுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். 2020 இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பாரம்பரிய நிதி ஆலோசனைகளைத் தாண்டி, உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பார்வையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த நிதி எழுத்தாளர் மற்றும் கூட்டு நிதியத்தின் பங்குதாரரான ஹவுஸ்ல், நிஜ உலக நிகழ்வுகள், வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் உளவியல் நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து, வாசகர்களை எதிரொலிக்கும் வகையில் உருவாக்குகிறார். இந்த புத்தகம் பணத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, இது எங்கள் நிதி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும் நிதியியல் கல்வியறிவின் நிலைகள், அவரது சொந்த அனுபவங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களிடமிருந்தும் வரையப்பட்ட கதைசொல்லல் அணுகுமுறை, நிதி நிபுணரின் விரிவுரையை விட அறிவார்ந்த நண்பருடன் உரையாடுவதைப் போன்றது. செல்வம் என்பது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள டாலர்கள் மற்றும் சென்ட்களைப் பற்றியது மட்டுமல்ல, பணத்துடனான நமது உறவை வடிவமைக்கும் உணர்ச்சிகள்,...