அன்பால் சினத்தை அடக்கிடு; நன்மையால் தீமையை அகற்றிடு; ஈகையால் உலோபித்தனத்தை விலக்கிடு, வாய்மையால் பொய்யினைப் போக்கிடு. தம்மபதம் கி.மு. 623ம் நூற்றாண்டில் ஒரு நாள். கோசல நாட்டின் தலைநகரான கபிலவாஸ்து நகரம், அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மன்னன் சுத்தோதனனும், மகராணி மாயாதேவியும் மிகவும் சந்தோஷத்தோடு. ஏராளமான தான தர்மங்களைச் செய்து கொண்டிருந்தனர். காரணம், அன்று அந்த நாட்டின் குட்டி இளவரசனுக்கு, பெயர் சூட்டு விழா. சாதாரணமாகவே, எந்த நாட்டிலும் மன்னன் மகனுக்கு பெயர் சூட்டும் நாளில் தலை நகரில் விழா திமிலோகப்படும். அதிலும் இந்த நாட்டு இளவரசன், பல ஆண்டுகால எதிர்பார்ப்பு. ஏக்கம் இவற்றுக்குப் பின் பிறந்திருப்பதால், கொண்டாட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. குறிப்பிட்ட நல்ல நேரத்தில், குழந்தைக்குப் பெயர் சூட்ட எழுந்தார். அரசனின் மூத்த ஆலோசகர், அசிடா. குழந்தையை தங்கத் தொட்டிலிருந்து மெதுவாகத் தூக்கினார். மெதுவாகச் சிணுங்கிய குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தார். 'இவன் எதிர்காலத்தில் செயற்கரிய செயலைச் செய்யப் போகிறான்.' அவரது உள்ளுணர்வு சொல்ல, அதனால் கௌதமன் என்றும், லட்சியத்தை அட...
கடவுள் கற்பனையே!