சிலைக் கடத்தல் வழக்குகளில் அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டும் தேடிப்பிடித்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், இதுவரை எந்த அர்ச்சகரையும் கைது செய்யாதது ஏன் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பழமையான கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளே கோயில் சொத்து களை சுரண்டி கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன. இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக் குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறநிலையத்துறை அதிகாரிகள் பலரை பொன்மாணிக்கவேல் அதிரடியாக கைது செய்துவரும் சூழலில், ‘‘தமிழக கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளி யேற வேண்டும்” என்று வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யுமான கங்கப்பா கருத்து தெரி வித்திருந்தார். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில், கடந்த 1981-ம் ஆண்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாத நிலையில் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ததில் ஒரு ஆட்சியராக தனது பங்க ளிப்பு முக்கியமானது என்றும், அதன்காரணமாக ஆட்சியாளர் களால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் என்பது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டைக்குள் உள்ளது. தனியார் வசம் இருந்த அந்த கோயில் நிர்வாகத்தை கடந்த 2003-ம் ஆண்டு அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தது. அதை எதிர்த்து ஜலகண்டேஸ்வரர் தர்மஸ்தாபனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசா ரித்த நான், கடந்த 2012-ம் ஆண்டில், “வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு அறநிலையத்துறை சட்ட ரீதியாக சொந்தம் கொண் டாடுவது சரியானதுதான்” என தீர்ப்பளித்தேன். இப்படி தமிழ கத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலுக் கும் ஒவ்வொரு வரலாறு இருக் கிறது. ஆனால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற வகையில் இப்போது எல்லோரும் அறநிலை யத்துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு கோயில்களை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்கி்ன்றனர். இதற்காக ஆளுநர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்கின்றனர். இது சட்ட ரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் ஏற்புடையதல்ல.
அறநிலையத்துறையை நிர்வ கிக்கும் அதிகாரிகளும் இந்துக்கள் தானே?.
தற்போது சிலைகள் திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தேடிப்பிடித்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி பொன்மாணிக்கவேல் இதுவரை சிலைகளை தினமும் கையால் தொட்டு பூஜை செய்யும் எந்த அர்ச்சகரையும் கைது செய்யாதது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி. அப்படியென்றால் அர்ச் சகர்களுக்கும், ஓதுவார்களுக்கும் சிலை கடத்தலில் பங்கு இல்லையா?
சட்டத்தை அப்பட்டமாக மீறி வேலூரில் சிலையை பிரதிஷ்டை செய்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கங்கப்பா, தற் போது அதை நியாயப்படுத்தும்விதமாக அறநிலையத்துறையை கலைத்து விட்டு ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். அப்படியென் றால் தற்போது பொன்மாணிக்க வேலையும் யாரோ மத ரீதியாக பின்னால் இருந்து இயக்குகின்ற னரோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்துக்களுக்காக நிறு வப்பட்ட அமைப்பு பாஜகவோ அல்லது ஆர்எஸ்எஸ்-ஸோ கிடை யாது. இஸ்லாமியர்களுக் கும், கிறிஸ் தவர்களுக்கும் நேரடியாக அரசாங்க கட்டுப்பாடுகள் இல்லை என்கிறபோது இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும் மட்டும் ஏன் அறநிலையத்துறை கட்டுப்பாடு என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் உருவாக் கப்படுவதற்கு முன்பாகவே திரு விதாங்கூர் தேவஸ்தானம் போல அறநிலையத்துறையும் உருவாக் கப்பட்டு விட்டது. கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண் டுமென்றால் சிலைகளை திருடிய வர்களும் இந்துக்கள்தானே. சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களையோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்களையோ நான் ஆதரிக் கவில்லை. ஆனால் இதற்கு மத ரீதியாக போலியாக முலாம் பூசக் கூடாது என்றுதான் எதிர்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்...