"கழிவறை இருக்கை"யின் புத்தகம் (The Toilet Seat)
இந்த சமூகத்தில் காமம் என்பது தவறானது என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் கல்வியின் முக்கியத்துவம், பாலுணர்வை அடக்குவதால் ஏற்படும் விளைவுகள், உறவுகளில் கல்வி சரியாக அமையாததற்கான காரணம் போன்ற பல விஷயங்களை இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.
கழிவறை இருக்கை புத்தகத்தை இலவசமாக PDFவடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நமது தந்தை பெரியார் நூலகத்தில் தளத்திலோ அல்லது
தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.