அற நிலைய மசோதா
அறநிலையங்கள் செயல்படும் விதத்தை இந்தக் குழு கண்காணிக்கும். தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் அற நிலையங்களுக்குத் தேவையான காரியங்களை அரசு செய்யும். அறநிலையங் களில் புழங்கிய நிதிக்கு முறையான கணக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தவிர வும், பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்த அறநிலையங்கள் பகுதி அளவில் பிராமணர் அல்லாதாரின் கைகளுக்கும் வந்து சேர்ந்தன.
நீதிக்கட்சி இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பிறகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்மானங்கள், சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது, 1926ல் நிறைவேறிய இந்து அறநிலையங்கள் பாதுகாப்புச் சட்டம். இந்துமதக் கோயில்களுக்குச் சொந்தமாக என்னென்ன நகைகள் இருக்கின்றன, நிலங்கள் எவ்வளவு உள்ளன. சொத்துகள் எங்கெங்கு உள்ளன. அவற்றை நிர்வகிப்பவர்கள் யார். கணக்கு வழக்குகள் யார் வசம் இருக்கின்றன என்பது பற்றி எந்த விவரத்தையும் அறிந்துகொள்ளமுடியாத சூழல் அப்போது இருந்தது.
இனியும் அதே நடைமுறை கூடாது. எல்லாவற்றையும் மாற்றவேண்டும் முறைப்படுத்த வேண்டும். விரைவில் மசோதா கொண்டுவரப்படும் என்ற அறிவித்தது நீதிக்கட்சி அரசு.
பிராமணர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புகள் தேவையற்ற முறையில் இந்து மத விஷயத்தில் அரசு தலையிடுகிறது. வேண்டாம். ஒதுங்கிச் கொள்ளுங்கள் என்றனர். ஆனால் எப்படியும் இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் ராமராய நிங்கார் உறுதியாக இருந்தார். அறநிலையப் பாதுகாப்புச் காகவே மசோதா கொண்டுவரப்படுகிறது. இதனால் மதத்துக்கு எந்தவி ஆபத்தும் ஏற்பட்டுவிடாது என்றார் ராமராய நிங்கார். அதன்படியே அறநிலையப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்து, அதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மசோதாவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. பிராமணர்களை எதிர்ந்த நீதிக்கட்சியினர் இப்போது கடவுளையும் எதிர்க்கத் துணிந்துவிட்டனர் என்று பிரசாரம் செய்தனர்.
மசோதாவை நிறைவேற்றுவதற்கு வாதியாக என். கோபாலசாமி அய்யங்கார் என்பவரை சிறப்பு உறுப்பினராக நியமித்தார் முதலமைச்சர் ராமராய நிங்கார். மசோதா நிறைவேறி, சட்டம் கொண்டு வந்தபிறகு அமைக்கப்பட்ட அறநிலைய பாதுகாப்புத் துறையின் தலைவராக டி. சதாசிவ அய்யரை நியமனம் செய்தார். இதன்மூலம் காலம் காலமாக மூடிவைக்கப்பட்ட கணக்குகள் அம்பலத்துக்கு வந்தன. கணக்குகள் பொதுப்பார்வைக்கு வந்தன.
ஆந்திரா பல்கலைக் கழகம் போல தமிழ் வழங்கும் பகுதிகளில் பிரத்யேகப் பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுத்தது. ராமநாதபுரம் ராஜா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில் அடிப் படையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
28 ஏப்ரல் 1925. உடல்நலம் குன்றியிருந்த பிட்டி. தியாகராயர் திடீரென மரணம் அடைந்தார். ஏற்கெனவே டி.எம். நாயர் என்ற படைத்தளபதியை இழந்திருந்த நீதிக்கட்சிக்கு தியாகராயரின் மறைவு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதேசமயம், காங்கிரஸில் இருந்த பிராமணர் அல்லாத தலைவர்களுள் செல்வாக்கு நிறைந்தவரான ஈரோடு ராமசாமி அங்கிருந்து வெளியேறியிருந் தார். சென்னை மாகாண அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட நிகழ்வு இது.
ஏன் காங்கிரஸில் இருந்து வெளியேறினார் ராமசாமி என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். பிறகு காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஈரோடு ராமசாமியையும் அழைத்துக்கொண்டு 1926 தேர்தல் களத்துக்கு வருவோம். ஏனெனில் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிப் பாதையைத் தீர்மானித்தவர் அவர்தான்!
எழுத்தாளர்
தோழர் சரண்