பிரிட்டிஷ் இந்தியாவில் மதுவிலக்கு பிரிட்ஷ் இந்தியா காலத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தபோது மதுவிலக்கு என்பது மகாத்மா காந்தியடிகளின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் முதன்முதலாக மதுவிலக்கை அமல்படுத்தினார். பின்னர் அதனை சித்தூர், கடப்பா, வட ஆற்காடு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். அதற்கு பின்னர் மதராஸ் மாகாண முதல்வரான ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் மாகணம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் மதராஸ் மாகாணம் முழுவதும் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் சில மருத்துவ தேவைகளுக்காக மட்டும் மருத்துவர்களின் அனுமதியை பெற்று அரசின் பெர்மிட் வாங்கி மது அருந்தலாம் என்ற தளர்வால் பணக்காரர்கள் பலர் சான்று பெற்று மது அருந்த தொடங்கினர். கள்ளச்சாராய கண்காணிப்புக்கும், கள்ளச்சாராய ஒழிப்புக்கும் அதிக நிதியை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. மது விற்பனை தொடக்கமும் முடிவும் இந்த நிலையில் அண்ணா மறைவுக்கு பிறக...
கடவுள் கற்பனையே!