இந்தியாவில் இந்துத் தாழ்த்தப்பட்ட சாதி ஒன்றில் ஏழ்மைக் குடும்பத்தில் அம்பேத்கர் பிறந்தார். தீண்டப்படாதவர்களுள் வரையறுக்கப்பட்ட பல பிரிவுகள் உள்ளன. இந்துச் சமூக அமைப்பில் கடைநிலை மக்கள் இவர்களே. பல நூற்றாண்டுகளாகச் சாதி இந்துக்கள் இவர்களைத் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைத்துள்ளனர். 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையை ஒழிப்பதற்கு வழிவகை செய்வதற்கு முன்னர்வரை 'தீண்டப்படாதவர்", 'அணுகக்கூடாதவர்', 'காணக்கூடாதவர்' என்ற முப்பிரிவினராகத் தீண்டப்படாதவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். முப்பது கோடி இந்துக்களில் தீண்டப்படாதவர்கள் ஆறு கோடி பேர். அதாவது இந்துஸ்தானத்தில் இவர்கள் இருபது விழுக்காட்டி னராக இருக்கின்றனர். சுருங்கக் கூறுவதானால் ஒவ்வொரு அய்ந்தாவது இந்துவும் தீண்டப்படாத ஆணாகவோ, பெண்ணாகவோ, குழந்தையாகவோ இருக்கிறார்கள்.
தீண்டப்படாதவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வகையான பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். தீண்டப்படாத வர்கள் பறையர், பஞ்சமர், ஆதிருத்திரர், அவர்ணஸ்தர், அந்திய ஜாஸ், நாமசூத்திரர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய சமூக இயலாமைகள் எண்ணற்றவை; இவை யனைத்தும் திட்டமிட்டுச் சுமத்தப்பட்டவை; கொடுமையானவை. இவர்கள் தொட்டால், இவர்களின் நிழல் பட்டால், குரல் கேட்டால் தீட்டாகிவிடுவோம் என்று சாதி இந்துக்கள் கருதுகின்றனர். எனவே ஒரு சாதி இந்து எதிரில் வரும்போது இவர்கள் “வழிவிட்டு விலகி ஓதுங்கிட வேண்டும்.இவர்கள் சில வகையான வீட்டு விலங்குகளை வளர்க்கக் கூடாது எனத் தடுக்கப்பட்டனர். குறிப்பிட்ட உலோகத்தாலான அணிகலன்களை மட்டுமே இவர்கள் அணிய வேண்டும். இவர்கள் எந்த வகை உணவை உண்ண வேண்டும்; எது போன்ற உடையை உடுத்த வேண்டும்; எவ்வகையான காலணிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. கிராமங்களுக்கு வெளியில் அழுக்கான இருண்ட தூய்மையற்ற குடியிருப்புகளில் வாழுமாறு இவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். புகை படிந்த, இருள் நிறைந்த, அசுத்தம் மிகுந்த குடிசைகளில் இவர்கள் வாழ்ந்தனர்.
தலையில் தலைப்பாகை, கையில் தடி, தோளில் ஒரு முரட்டுப் போர்வை; இடுப்பில் ஒரு கோவணம்; இதுதான் ஓர் ஆணின் கோலம். பெண்களுக்கோ முழங்கால் அளவுக்கும் எட்டாத முரட்டுச் சேலை மட்டுமே உடை.
இந்தத் தீண்டப்படாத வகுப்பு இந்துக்களுக்குப் பொதுக் கிணற்றைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனவே எத்தகைய அழுக்கு நீர் எங்குக் கிடைத்தாலும் குடிக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். சாதி இந்துக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்பு மக்களின் குழந்தைகள்: சேர்க்கப்படவில்லை. இவர்கள் இந்துக் கடவுள்களை வழிபடுகிறார்கள்; இந்துப் பண்டிகைகளைக் கொண் டாடுகிறார்கள்; ஆனால் இவர்களுக்கு இந்துக் கோயில் களின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. மயிர் மழிப்போரும், துணி வெளுப் போரும் இவர்களுக்கு ஊழியம் செய்ய மறுத்தனர்.
சாதி இந்துக்கள் எறும்புகளுக்குக்கூட விருப்புடன் சர்க்கரை யைத் தூவுகின்றனர்; வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்க்கின்றனர். மற்ற மதத்துக்காரர்களை வீட்டிற்குள் அழைக்கின் றனர். ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தரவும் மறுக்கின்றனர்; எள் முனையளவுகூட இரக்கம் காட்டுவ தில்லை. தீண்டப்படாத வகுப்பு இந்துக்கள் மனிதத்தன்மை அற்ற முறையில் விலங்குகளை விட இழிவாக நடத்தப்படுகின்றனர். சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் இந் நிலையே இன்றும் நீடிக்கிறது. ஆனால் பெருநகரங்களில் இக்கொடுமை பெரும்பாலும் மறைந்துவருகிறது.
இவர்கள் படும் துன்பங்கள் இந்த அளவோடு நிற்கவில்லை. காலங்காலமாக இவர்கள் கல்லாதவர்கள்; தீண்டப்படாதவர்களாக இழிவாக நடத்தப்பட்டலர்கள். எனவே காவல்துறை, இராணுவம் உட்பட அனைத்துப் பொது ஊழியத் துறைகளிலும் இவர் களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆதலால் பரம்பரைத் தொழில்க ளையே செய்துவருகின்றனர். தாழ்ந்த, இழிந்த தொழில்களாகக் கருதப்படும் தெருக்கூட்டுதல், மலம் அள்ளுதல், செருப்புத் தைத்தல் போன்றவற்றைச் சிலர் செய்கின்றனர். இறந்த மாடுகளின் தோலை உரித்தல், அவற்றைப் பதப்படுத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். மூங்கில் வெட்டுதல், கரும்பு வெட்டுதல், புல் அறுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர். வாய்ப்புக் கிடைத்த சிலர் ருத்தகையாளர்களாக நிலத்தில் சாகுபடி செய்கின்ற னர்; பலர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். பெரும்பாலோர்.
கிராமத்திற்குத் தொண்டூழியம் செய்பவர்கள். இவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் உணவு, மற்றும் தானியத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்; செத்த ஆடுமாடுகளை உண்கின்றனர். இவ்வாறாக இவர்களுக்குச் சமுதாய, மத மற்றும் குடிமை உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இவர்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்பே இல்லை. எனவே, தீண்டப்படாத இந்துக்களின் வாழ்க்கை மிகப் பழங் காலத்து வாழ்க்கையாகவே இருக்கிறது. சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட, கொஞ்சமும் போதாத, தூய்மையற்ற சூழலில் பல துன்பங்களுடன் இவர்கள் வாழ்க்கை தொடர்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இவர்கள் கடனில் பிறந்து கடனிலேயே மடிகிறார்கள்; தீண்டப்படாதவர்களா கவே பிறக்கிறார்கள்; தீண்டப்படாதவர்களாகவே வாழ்கிறார்கள்; தீண்டப்படாதவர்களாகவே இறக்கிறார்கள்.
https://youtube.com/channel/UChXZazwXBCbHV1gpQrE-7-w.
@ambeth_priyan_