இந்தியாவில் இந்துத் தாழ்த்தப்பட்ட சாதி ஒன்றில் ஏழ்மைக் குடும்பத்தில் அம்பேத்கர் பிறந்தார். தீண்டப்படாதவர்களுள் வரையறுக்கப்பட்ட பல பிரிவுகள் உள்ளன. இந்துச் சமூக அமைப்பில் கடைநிலை மக்கள் இவர்களே. பல நூற்றாண்டுகளாகச் சாதி இந்துக்கள் இவர்களைத் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைத்துள்ளனர். 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையை ஒழிப்பதற்கு வழிவகை செய்வதற்கு முன்னர்வரை 'தீண்டப்படாதவர்", 'அணுகக்கூடாதவர்', 'காணக்கூடாதவர்' என்ற முப்பிரிவினராகத் தீண்டப்படாதவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். முப்பது கோடி இந்துக்களில் தீண்டப்படாதவர்கள் ஆறு கோடி பேர். அதாவது இந்துஸ்தானத்தில் இவர்கள் இருபது விழுக்காட்டி னராக இருக்கின்றனர். சுருங்கக் கூறுவதானால் ஒவ்வொரு அய்ந்தாவது இந்துவும் தீண்டப்படாத ஆணாகவோ, பெண்ணாகவோ, குழந்தையாகவோ இருக்கிறார்கள். தீண்டப்படாதவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வகையான பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். தீண்டப்படாத வர்கள் பறையர், பஞ்சமர், ஆதிருத்திரர், அவர்ணஸ்தர், அந்திய ஜாஸ், நாமசூத்திரர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய சமூக இயலாமைகள் எண்ணற்றவை; இவை ய...
கடவுள் கற்பனையே!